முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் | பேவரைட் ஆஸ்திரேலிய நடிகையுடன் புத்தாண்டை கொண்டாடிய நதியா | நான் ஹிந்தியில் படம் இயக்கினால் இவர்தான் ஹீரோ : வினோத் |

நடிகை சோனியா அகர்வால் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கிராண்மா' படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த படத்தை அடுத்து மீண்டும் ஹாரர் த்ரில்லர் படத்தில் நடிகை சோனியா அகர்வால் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சோனியா அகர்வாலும், ஸ்மிருதி வெங்கட், அறிமுக நடிகர் ரோஷன், இசைப்பாளர் சித்தார்த் விபின், இயக்குனர் சுப்ரமணிய சிவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் தொடக்கவிழா பூஜையுடன் நடைபெற்றது. இதில் சோனியா அகர்வால், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வித்தியாசமான ஹாரர் த்ரில்லரில் உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் நடைபெறவுள்ளது.