தீனா படத்திற்கு பிறகு மதராஸி படத்தில் வேண்டுதலை நிறைவேற்றிய ஏ.ஆர்.முருகதாஸ் | சிரஞ்சீவி - நயன்தாரா படக்குழுவை சந்தித்த விஜய் சேதுபதி படக்குழு | ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து அபிஷேக் பச்சன் வழக்கு: புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி மனு | மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே | என் அழகான ஜென்டில்மேன் நடிகரே : ரவி மோகனை வாழ்த்திய சுதா கெங்கரா! | நயன்தாரா ஆவணப்படம் வழக்கு : பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு | 2 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ள மிடில் கிளாஸ் | அஜித் 64 படத்தை குறித்து புதிய தகவல் இதோ | மகுடம் பட பிரச்சனையை சுமூகமாக தீர்த்த விஷால் | சசி, விஜய் ஆண்டனி படத்தலைப்பு நூறுசாமி |
எஸ்.என்.ஆர் பிலிம்ஸ் சார்பில் சதீஷ் நாகராஜன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'டியர் டெத்'. சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் எழுதியுள்ளார். பிரேம்குமார் இயக்கியுள்ளார். அசோக் சாமிநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார், நவீன் அண்ணாமலை இசை அமைத்துள்ளார்.
படம் குறித்து இயக்குனர் பிரேம்குமார் கூறியதாவது: இதுவரை இறப்பு என்றாலே நெகட்டிவ் ஆகத்தான் பார்க்கப்படுகிறது. ஆனால் சாவு என்பது பயப்படுத்தக்கூடியதாக இருந்தாலும் அது கம்பீரமானது. இறப்பு ஒரு மனிதனாக நம்மிடம் பேசினால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்த படத்தின் கதை. அன்றாடம் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி அதேசமயம் நிஜத்தில் நடந்த நிகழ்வுகளையும் கொஞ்சம் கற்பனையையும் கலந்து இந்த படம் உருவாகி உள்ளது.
இந்த படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் படத்திலுள்ள கதாபாத்திரங்களுடன் ஏதோ ஒரு விதத்தில் தங்களை பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும். காதல், அம்மா, குழந்தை, நட்பு என நான்கு கதைகள் இடம் பெற்றுள்ளன. இந்த நான்கு கதைகளுடன் இறப்பு எப்படி தொடர்புபடுத்தப்படுகிறது என்பதை ஹைபர்லிங்க் முறையில் கூறியுள்ளோம். சென்சாரில் 'யு' சான்றிதழ் பெற்றுள்ள இந்தப்படம் வரும் டிசம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.