இருவரைக் காப்பாற்றி மீட்டெத்த 'மதராஸி' | செப்டம்பர் 12ல் 8 படங்கள் ரிலீஸ் | நடிகைகளை வைத்து பாலியல் தொழில் : பாலிவுட் நடிகை கைது | பிளாஷ்பேக் : இளையராஜாவுக்காக ஒரு வருடம் காத்திருந்த நதியா, பாசில் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர், சிவாஜியின் ஆஸ்தான வசனகர்த்தா | 'பிக்பாஸ்' விஜய் சேதுபதிக்கு 75 கோடி சம்பளம் | அஜித் படத்தின் மீது இளையராஜா வழக்கு | பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் |
மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களை தொடர்ந்து தற்போது ‛பத்து தல' படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சிம்பு. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு படம் திரைக்கு வருகிறது. அதோடு பத்து தல படத்திற்குப் பிறகு கொரோனா குமார் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படம் என இரண்டு படங்களில் அடுத்த படியாக சிம்பு நடிக்கப் போகிறார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகின. ஆனபோதிலும் அது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியிடப்படவில்லை.
அதேசமயம் சிம்பு தற்போது மேலும் சில இயக்குனர்களிடத்திலும் கதை கேட்டுள்ளார். அதனால் அடுத்தபடியாக சிம்பு எந்த இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்பது குறித்த எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இப்படியான நிலையில், தற்போது சிம்பு ஒரு தற்காப்பு கலையின் பயிற்சியில் தீவிரமாக ஈடுபடப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்து தான் நடிக்கவிருக்கும் படத்திற்காக இந்த பயிற்சியில் அவர் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.