அதிக சதவீதம் கேட்கும் 'ஜனநாயகன்' ; தயங்கும் தியேட்டர் உரிமையாளர்கள் : பிரச்னை தீருமா? | 'பராசக்தி' படத்தில் அண்ணாதுரை... கருணாநிதியும் இருக்கிறாரா? | 2வது படத்திலேயே ரஜினியை இயக்கும் வாய்ப்பை பெற்ற சிபி சக்கரவர்த்தி | ரத்தக்கண்ணீருக்கு புதிய அங்கீகாரம் | ஓடிடி டிரெண்டிங்கில் 'பகவந்த் கேசரி' | பொங்கல் போட்டி : டிரைலர்களில் முந்தும் 'ஜனநாயகன்' | எனக்கு யாரும் முழு சம்பளம் தந்ததில்லை: ரச்சிதா மகாலட்சுமி பேச்சு | 'திரெளபதி 2' பாடலில் சின்மயி குரல் நீக்கம்: இயக்குனர் பேட்டி | டிரைலரிலும் போட்டி போடும் 'பராசக்தி' | பிளாஷ்பேக்: தமிழ் படத்தில் நடித்த பிரேம் நசீர் மகன் |

இயக்குனர் ஷங்கர் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்- 2 மற்றும் ராம்சரண் நடிப்பில் ஆர்சி- 15 என்ற இரண்டு படங்களை இயக்கி வருகிறார். இதற்கிடையே தன்னுடைய எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக ‛அநீதி' என்ற படத்தையும் அவர் வெளியிட உள்ளார். வசந்தபாலன் இயக்கி வரும் இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்க, துஷாரா விஜயன் நாயகியாக நடித்து வருகிறார்.
இவர்களுடன் காளி வெங்கட், வனிதா, சாரா அர்ஜுன் உட்பட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஜி.வி .பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தின் போஸ்டர் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் 2023ம் ஆண்டு பிப்ரவரியில் அநீதி படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




