ரஜினி அடுத்த பட ரேசில் வினோத், அருண்குமார்! | சிவாஜி குடும்பத்தில் இருந்து மற்றொரு நடிகர்! | சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக மோகன்லால்? | பூல் சக் மாப் : 60 கோடி நஷ்டஈடு கேட்டு பிவிஆர் ஐநாக்ஸ் வழக்கு | வியாபார நிலையில் முன்னேறிய சூரி | எங்கள் தங்கம், சூர்யவம்சம், மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? |
'சந்திரலேகா' தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகமாகியிருந்தார் நடிகை ஸ்வேதா பண்டேகர். சுமார் 8 வருடங்களாக ஒளிபரப்பாகியுள்ள இந்த தொடர் தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே மிக நீண்ட சீரியல் என்கிற சாதனையை படைத்திருந்தது. இந்த சீரியலானது சில மாதங்களுக்கு முன் நிறைவுற்றது.
இந்நிலையில், அவர் தனது அடுத்த ப்ராஜெக்ட்டுக்கான கதை பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். மாறாக, அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், தனது காதல் கதையை அப்டேட்டாக கொடுத்துள்ளார் ஸ்வேதா.
ஸ்வேதா தனது காதலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு 'என் இதயம் நீண்ட நாட்களுக்கு முன் தொலைந்து போனது. அதை இப்போது கண்டுபிடித்துவிட்டேன்' என பதிவிட்டுள்ளார். ஆனால், அந்த புகைப்படத்தில் ஸ்வேதாவின் காதலர் பின்னால் திரும்பிய படி நிற்கிறார். எனவே, அவரை யார் என்று தெரிந்து கொள்ள முடியாத ரசிகர்கள் ஆர்வமிகுதியால் ஸ்வேதாவிடம் அவர் யார்? எப்போ ரிவீல் பண்ணுவீங்க? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.