பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

பிரபுசாலமன் இயக்கத்தில் கோவை சரளா, அஷ்வின் குமார் முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் ‛செம்பி'. மலைவாழ் மக்களின் பின்னணியில் பாட்டிக்கும், பேத்திக்கும் உள்ள உறவை மையப்படுத்தி இந்த படத்தை எடுத்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. சமீபத்தில் இதன் இசை வெளியீட்டு விழா நடந்தது. நடிகர் கமல்ஹாசன் பங்கேற்று அதை வெளியிட்டார். தொடர்ந்து டிரைலரும் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது டிச., 30ல் படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.