மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி | 2025 - வசூல் படங்களில் முதலிடத்தைப் பிடிக்குமா 'காந்தாரா சாப்டர் 1' ? | விஷால் - சுந்தர் சி கூட்டணி படத்தின் அறிவிப்பு… விரைவில்… | மனிஷாவுக்கு கை கொடுக்குமா 'மெஸன்ஜர்' | பிளாஷ்பேக் : 'ஷோலே' படத்தை தழுவி உருவான 'முரட்டு கரங்கள்' | பிளாஷ்பேக்: காப்பி ரைட் வழக்கில் சிக்கிய சிவாஜி படம் | இந்தியா, ஆசியான் திரைப்பட விழா: சென்னையில் தொடங்கியது | முதல் நாள் வசூலில் முந்தும் 'டியூட்' | அஜித் 64 : தீபாவளி அறிவிப்பு? | சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாரதி கண்ணம்மா' தொடரில் வில்லி வெண்பாவாக நடித்து புகழ் பெற்றவர் பரீனா ஆசாத். கர்ப்பமாக இருந்த காலக்கட்டத்திலும் தொடர்ந்து நடித்து வந்த பரீனா, பிரசவத்துக்கு பிறகும் சீக்கிரமே கம்பேக் கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சி கலந்த இன்பத்தில் ஆழ்த்தினார். இப்போதும் வில்லியாக கலக்கி வரும் அவர் இண்ஸ்டாவிலும் போட்டோஷூட் மாடலிங் என அதிக பாலோவர்களை பிடித்து வைத்திருக்கிறார். அவர் தற்போது தனது மகன் ஸயனின் முதல் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார். துபாயில் உள்ள மெரீனா க்ரூஸ் யாட்ச் என்ற கப்பலில் மகனின் முதல் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ள பரீனா அதன் வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வெண்பாவின் ரசிகர்களால் வைரல் செய்யப்பட்டு வருகிறது.