சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் வில்லி நடிகையாக மிகவும் பிரபலமடைந்தார் பரீனா ஆசாத். தொடர்ந்து இன்ஸ்டாகிராமிலும் ரசிகர்களின் பேவரைட் கன்னியாக வலம் வந்தார். குழந்தை பிறந்த பின் உடனே நடிக்க வந்த பரீனா தனது உடலையும் வொர்க் -அவுட் செய்து பிட்டாக வைத்திருக்கிறார். பாரதி கண்ணம்மா சீசன் 2க்கு பிறகு சீரியல் எதிலும் கமிட்டாகாததால் இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் அவர் தனது வொர்க்-அவுட் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், கயிற்றில் தலைகீழாக தொங்கிய படி மிகவும் கடினமான வொர்க் - அவுட் செய்கிறார். இதைபார்க்கும் பலரும் பரீனா தனது பிட்னஸுக்காக இவ்வளவு மெனக்கிடுகிறாரா என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.