ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் | ஹிருது ஹாருன் ஜோடியான சம்யுக்தா விஸ்வநாதன் | ஹீரோயின் ஆன 'பிக்பாஸ்' ஜனனி | பிளாஷ்பேக்: திருமண நாளில் படங்களை வெளியிட்ட கே.பாலாஜி | பிளாஷ்பேக்: மின்னி மறைந்த ஸ்ரீராம் | ஹிந்தியில் படத்துக்கு வரவேற்பு: புனேவுக்கு நடிகர் தனுஷ் விசிட் | தயாரிப்பாளர் ஆனார் 'டாடா' இயக்குனர்: கவுதம் ராம் கார்த்திக் அதில் ஹீரோ | 10 ஆயிரம் கண்டெயினர் யார்டில் படமாக்கப்பட்ட 'அனலி' |

இயக்குனர் வினீத் ஸ்ரீனிவாசன் நடித்த மலையாள படம் முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ். அபினவ் சுந்தர் நாயக் இயக்கி இருந்த இந்த படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, தான்வி ராம், ஜெகதீஷ், சுதி கோப்பா உள்பட பலர் நடித்திருந்தார்கள். ஒரு சாதாரண வழக்கறிஞர் குறுக்கு வழியின் மூலம் எப்படி பெரிய நிறுவனத்திற்கு அதிபராகிறார் என்பது மாதிரியான கதை. இந்த படம் கேரளாவில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் தயராக இருக்கிறது என்று வினீத் சீனிவாசன் அறிவித்திருக்கிறார்.
நேற்று நடந்த படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய வினீத் ஸ்ரீனிவாசன் “படத்திற்கு மக்களும், மீடியாக்களும் கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி. இது நாங்களே எதிர்பார்க்காத ஒன்று. இந்த உற்சாகத்தில் தொடர்ந்து நாங்கள் இணைந்து பணியாற்றும் ஆர்வத்தை கொடுத்திருக்கிறது. அதன் அடிப்படையில் முகுந்தன் உன்னி அசோசியேட்சின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளோம். 2024ம் ஆண்டு மக்களின் பார்வைக்கு அதனை கொண்டு வருவோம். என்றார்.




