பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் |
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா போன்ற படங்களை இயக்கியவர் பொன்ராம். தற்போது விஜய் சேதுபதி, அனு இமானுவல் நடித்துள்ள டிஎஸ்பி என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இமான் இசையமைத்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு இந்த படம் மூலம் தமிழில் பாடி இருக்கிறார் உதித் நாராயணன்.
அவருடன் இணைந்து எடுத்த போட்டோவை பகிர்ந்து, ‛‛நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் உதித் நாராயணன் பின்னணி பாடி இருக்கிறார். அவருடன் சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேசனும் இணைந்து பாடி இருக்கிறார். அவருடன் பணிபுரிவது மகிழ்ச்சி. அவர் பாடியுள்ள இந்த பாடலை பாடலாசிரியர் விஜய் முத்து பாண்டியன் எழுதியிருக்கிறார். இந்த பாடல் விரைவில் சிங்கிள் பாடலாக வெளியாக உள்ளது'' என்று தெரிவித்திருக்கிறார் இமான்.
கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த டிஎஸ்பி படத்தின் முதல் பார்வை சில தினங்களுக்கு முன்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.