எனக்கு மரணமும் நிகழலாம் - பாலா உருக்கம் | அடம்பிடித்த சிறுமி : வீடியோ காலில் வந்து இன்ப அதிர்ச்சி தந்த விஜய் | நீச்சல் குளத்தில் போட்டோசூட் நடத்திய ஷிவானி | தங்கலான் படப்பிடிப்பில் மீண்டும் இணைந்த விக்ரம் | மாறிமாறி வாழ்த்து தெரிவித்துக் கொண்ட கீர்த்தி சுரேஷ் - சூரி | லியோ அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும்? | போனில் மட்டும் பேசு : பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு டார்ச்சர் கொடுத்த இயக்குநர் | எதிர்நீச்சல் தொடரில் 10 ஆண்டுகள் கூட நடிப்பேன் : மதுமிதா மகிழ்ச்சி | தீபிகா படுகோனின் ஜிம் மேட்டாக மாறிய ஐஸ்வர்யா மேனன் | 17 வருடங்களுக்கு பிறகு 2ம் பாகத்திற்காக இணைந்த சுரேஷ் கோபி - ஜெயராஜ் |
உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, நடித்திருக்கும் படம் கலகத் தலைவன். தடம், தடையறத் தாக்க, மீகாமன் படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கி உள்ளார். ஈஸ்வரன், பூமி படங்களில் நடித்த நிதி அகர்வால் நாயகியாக நடித்துள்ளார். பிக் பாஸ் ஆரவ் வில்லனாக நடித்துள்ளார், கலையரசன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி, இயக்குனர்கள் மிஷ்கின், சுந்தர்.சி, ராஜேஷ்.எம், அருண்ராஜா காமராஜ், மாரி செல்வராஜ், பிரதீப் ரங்கநாதன், நடிகர்கள் அருண் விஜய், விஷ்ணு விஷால், பாபிசிம்ஹா, உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் உதயநிதி ஸ்டாலின் ரொம்பவே ஜாலியாக பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: இந்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள், குறிப்பிட்ட நாளுக்குள் எடுத்தார். ஆனால் 3 வருடமாக அதனை செதுக்கி வருகிறார். நவம்பர் 18ம் தேதி வெளியீடு என்று அறிவிக்காமல் இருந்திருந்தால் இன்னும் செதுக்கி கொண்டிருந்திருப்பார். செதுக்கிய வரை போதும் என்று ரிலீசுக்கு வந்து விட்டோம்.
இந்த படத்திற்காக என்னை விட அதிகமாக உழைத்தது கதை நாயகி நிதி அகர்வால்தான். என்னை விட அதிக காட்சிகளில் அவர்தான் நடித்திருக்கிறார். இனி அவர் தமிழ் படங்களில் நடிப்பாரா என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு அடி உதையெல்லாம் வாங்கி நடித்திருக்கிறார். நான்தான் சினிமாவை தாங்கி கொண்டிருக்கிற மாதிரி எல்லோரும் நடிப்பை விட்டு விடாதீர்கள் என்று வலியுறுத்துகிறார்கள். நான் இப்போதான் நடிக்கவே ஆரம்பித்திருக்கிறேன். நான் நடித்த படங்களின் இரண்டாம் பாகத்தில் நடியுங்கள் என்கிறார்கள். ஆனால் எனக்கு வேறு வேலைகள் நிறைய இருக்கிறது. அதனால் மாமன்னன் படத்தை முடித்துவிட்டு செல்போன் நம்பரை மாற்றிவிட்டு எஸ்கேப் ஆகப்போகிறேன். இவ்வாறு பேசினார் உதயநிதி ஸ்டாலின்.