லோக்கல் டைம்ஸ்: 13ம் தேதி வெளியாகும் புதிய வெப் சீரிஸ் | கலையரசனின் 'கொலைச்சேவல்' 13ம் தேதி ரிலீஸ் | மரகதமலை: பெண் இயக்குனரின் பேண்டசி படம் | 'டெக்ஸ்லா' கதை இதுதானா? | பிளாஷ்பேக்: எம்ஜிஆர் ஜோடியாக நடிக்க மறுத்த சந்திரகாந்தா | பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் |

கிராமத்து பாடல்கள் மூலம் பிரபலமானவர்கள் செந்தில் - ராஜலட்சுமி தம்பதியர். விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் அவர்களுக்கு ஒரு அடையாளத்தை தந்தது. தொடர்ந்து அந்த டிவியில் பல ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றனர். இருவரும் சினிமாவிலும் பல பாடல்களை இணைந்து பாடி உள்ளனர். குறிப்பாக ராஜலட்சுமி குரலில் வெளியான ‛‛என்ன மச்சான், சாமி சாமி'' பாடல்கள் மிகவும் பிரபலமானது.
இந்நிலையில் சினிமாவில் நடிகையாக களமிறங்கி உள்ளார் ராஜலட்சுமி. நார்மல் பிலிம் பேக்டரி சார்பாக இளஞ்செழியன் தனது நண்பர்களுடன் சேர்ந்து தயாரிக்கும் படம் "லைசென்ஸ்". இந்த படத்தில் முதன்மை வேடத்தில் இவர் நடிக்கிறார். ராதாரவி, அறிமுக நடிகரான விஜய் பாரத், மதுரை ரிஷி, குழந்தை நட்சத்திரம் அதிதி பாலமுருகன் ஆகியோரும் நடிக்கின்றனர்.
தந்தை மகள் பாசப் பின்னணியுடன் பெண்களின் பாதுகாப்பு தன்மையை பற்றி விவாதிக்கும் பரபரப்பான கதையாக இருக்கும் என்கிறார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் கணபதி பாலமுருகன். இவர் கவுண்டமணி நடித்து வெற்றிகரமாக ஓடிய "எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது".என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.