ஒரு உயிர் பலி : சிறப்புக் காட்சிகளை ரத்து செய்தது தெலங்கானா அரசு | புஷ்பா 2 - முதல்நாள் வசூல் முதல் கட்டத் தகவல் | டொவினோ தாமஸின் ‛ஐடென்டிடி' டீசர் வெளியானது | அரபு நாடுகளில் புஷ்பா 2 படத்தின் 19 நிமிட காட்சிகள் நீக்கம் | சுரேஷ் கோபி மகனுக்கு சண்டை சொல்லித்தரும் மம்முட்டி | புஷ்பா 2 - அமெரிக்காவில் முதல் நாளில் 4 மில்லியன் வசூல் | பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ : தெலுங்கில் சாதிப்பாரா ஜோதி கிருஷ்ணா | இறுதிக்கட்டத்தில் 'திருவள்ளுவர்' படம் : இளையராஜா இசை | 'சூது கவ்வும் 2' : ஹரிஷா ஜஸ்டின் முதல் படம் 13ம் தேதி வெளியாகிறது | 'பிக்பாஸ்' அர்ச்சனாவுக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார் |
ஒரு திரைப்படம் வெளிவரும் போது அது பற்றிய செய்திகள், விளம்பரங்கள், புரமோஷன் அவசியம். பாலிவுட் உடன் ஒப்பிடும் போது கோலிவுட் நடிகர்கள் தங்களது படங்களுக்காக பெரிய அளவிலான புரமோஷன் எதுவும் செய்வதில்லை. தாங்கள் நடிக்கும் படங்களைப் பற்றி ஒரு பேட்டியைக் கூட சில நடிகர்கள் தர மறுப்பதும், சிலருக்கு மட்டுமே தருவோம் என்று பாரபட்சம் காட்டுவதும் காலம் காலமாக நடந்து வருகிறது.
நடிகர்களில் குறிப்பாக அஜித், நடிகைகளில் நயன்தாரா ஆகியோர் தாங்கள் நடிக்கும் படங்களின் எந்த ஒரு விழாவிலும் கலந்து கொள்ள மாட்டார்கள். பத்திரிகைப் பேட்டி ஆகியவற்றையும் தர மாட்டார்கள். படங்களில் நடிக்க ஒப்பந்தம் போடும் போதே அதைக் குறிப்பிட்டுவிடுவார்கள் என்பது கோலிவுட் வட்டாரத் தகவல்.
இந்நிலையில் அஜித் நடித்து 2023 பொங்கலுக்கு வெளிவர உள்ள 'துணிவு' படத்திற்காக நடைபெற உள்ள விழாவில் அஜித்தை கலந்து கொள்ள வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகின. அந்த செய்தி பரவியதும் அஜித் தரப்பிலிருந்து அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா நேற்று டுவிட்டரில், “ஒரு நல்ல படம் தானே விளம்பரப்படுத்திக் கொள்ளும், நிபந்தனையற்ற அன்பு - அஜித்” என பதிவிட்டிருந்தார்.
அஜித்தின் இந்தக் கருத்து புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு படம் பற்றிய செய்திகள் பத்திரிகைகள், இணையதளங்களில் வருவதும், ஒரு படத்திற்கான டீசர், டிரைலர் ஆகியவை வெளியிடுவதும் கூட 'புரமோஷனில்' தான் சேரும். தனது படம் பற்றி எந்த ஒரு தகவலையும், செய்தியையும் வெளியிடாமல் ஒரு நடிகர் தனது படத்திற்குக் கூட்டத்தைச் சேர்க்க முடியாது.
அஜித் சொல்வது போல ஒரு நல்ல படம் தானே விளம்பரத்தைத் தேடிக் கொள்ளும் என்றால் அஜித் நடித்து வெளிவந்து ஓடாத, வசூலிக்காத படங்களை நல்ல படங்கள் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.
படத்திற்கு புரமோஷன் செய்வதை ஏற்க மறுக்கும் அஜித், பைக்கில் இந்தியா முழுவதும் சுற்றி வந்ததும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அவரது அனுமதி இல்லாமல் அந்தப் படங்கள் எப்படி வெளி வந்தது. அதுவும் ஒரு வகையில் அவருக்கான புரமோஷன்தானே என கோலிவுட்டிலேயே கேட்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் அஜித்தை விடவும் சாதித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அவர்கள் பட சம்பந்தப்பட்ட விழாக்களில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார்கள். தங்களை நம்பி முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களுக்கு எந்த பாதிப்பும் வரக் கூடாது என்பதுதான் அதற்குக் காரணம்.
ஒரு படம் நல்ல படமா, மோசமான படமா என்பது படம் வெளிவந்த பிறகுதான் தெரியும். ஒரு படத்தில் நடிக்கும் நடிகர்களும், நடிகைகளும், மற்ற கலைஞர்களும் அது நல்ல படமாக வரும் என்று நினைத்துதான் வேலை செய்வார்கள். ஆனால், அப்படம் வெளியாகும் போது ரசிகர்களுக்கு ஏதோ ஒரு காரணத்திற்காகப் பிடிக்காமல் போகும். மோசமான படம் என்று தெரிந்தே அதில் ஒரு நடிகரோ, நடிகையோ எப்படி நடிக்க சம்மதிப்பார்கள்.
சிம்பிளாக 'எனது பாலிசி' எந்த புரமோஷனுக்கும் வர மாட்டேன் என சொல்லிவிட்டுப் போயிருக்கலாம். அப்படியில்லாமல் புரமோஷன் செய்யும் மற்றவர்களையும் விமர்சிப்பது போல அஜித் கருத்து உள்ளது என்றே பெரும்பாலானோர் நினைக்கிறார்கள்.