இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

போதை மருந்து பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்று திரும்பியவர் நடிகை ராகினி திவேதி. தமிழில் நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம்ரவி ஜோடியாக நடித்திருந்தார். போதை மருந்து வழக்கு நடந்து வந்தாலும் தற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கும் ராகினி படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். தற்போது அவர் கன்னடத்தில் நடித்து வரும் படம் நானு ஒப்பா பாரதியா. இதனை பாபு கணேஷ் இயக்குகிறார் படத்தில் ராகினி ராணுவ கமாண்டராக நடிக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: எனது தந்தை இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர், அதனால் இது எனது மனதுக்கு நெருக்கமான கதாபாத்திரம். நான் அண்டர்கவர் கமாண்டோவாக நடிக்கிறேன். அந்த உண்மையான தோற்றம் மற்றும் உடல் மொழி இடத்தைப் பெற என் அப்பாவை பார்த்து கற்றுக் கொண்டிருக்கிறேன். திரையில் கமாண்டோவாக நடிப்பது கடினமானது, அதனால். நான் கிக் பாக்ஸிங் உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்று வருகிறேன். மேலும் ஒரு பெண் கமாண்டோவின் தேசபக்தியை வெளிப்படுத்தும் ஆக்ஷன் காட்சிகளுக்காக துப்பாக்கி பயிற்சியும் பெற்று வருகிறேன் என்கிறார் ராகினி திவேதி.