மீண்டும் 'மயோசிடிஸ்' பிரச்னை: சிகிச்சை பெறும் சமந்தா | தமிழ் சினிமாவில் எதுவும் நடக்கவில்லை, கமிட்டியும் தேவையில்லை: ஐஸ்வர்யா ராஜேஷ் | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழா: இந்தியா முழுவதும் நடக்கிறது | 'லவ் அண்ட் வார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு: 2 வருடங்களுக்கு பிறகு வெளிவருகிறது | சாரி: சேலையை மையமாக கொண்ட சைக்காலஜிக்கல் திரில்லர் படம் | இலங்கை தமிழர்கள் இணைந்து உருவாக்கிய 'ரத்தமாரே': ரஜினி வாழ்த்து | பிளாஷ்பேக்: 4 சகோதரர்கள் இணைந்து நடித்த படம் | நடன இயக்குனர் ஜானி மீது நடனப் பெண் புகார் | திருமண மோதிரம் 'மிஸ்ஸிங்' : மீண்டும் பிரிவு சர்ச்சையில் ஐஸ்வர்யா ராய் | அந்த இடத்தில் டாட்டூ? சுந்தரி நடிகைக்கு குவியும் அட்வைஸ் |
கார்த்தி, ராஷி கண்ணா நடித்த சர்தார் படம் கடந்த 21ம் தேதி வெளியானது. ஓரளவிற்கு நல்ல வரவேற்புடன் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. நல்ல வசூலை கொடுத்து வருதாக தயாரிப்பு தரப்பு அறிவித்தது. இந்த நிலையில் படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நேற்று நடந்தது. இதில் சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதை இயக்குனர் பி.எஸ்.மித்ரனும், கார்த்தியும் இணைந்து அறிவித்தனர். இது தொடர்பான டீசரும் வெளியிடப்பட்டது.
சர்தார் படத்தின் இறுதியில் உளவாளி சர்தார் மறைந்து விடுவார். அவரது மகன் இன்ஸ்பெக்டர் விஜய் பிரகாஷ் புதிய உளவாளியாக நியமிக்கப்படுவார். அவரின் முதல் மிஷன் கம்போடியாவில் என்று தெரிவிக்கப்பட்டிருக்கும். இதன் படப்பிடிப்புகள் உடனே தொடங்க இருப்பதாகவும் இயக்குனர் மித்ரன் தெரிவித்தார். இரண்டாம் பாகத்தின் பெரும்பகுதி கம்போடியாவில் நடக்கும் என்று தெரிகிறது. முதல் பாகத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனமே இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறது.
விழாவில், தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்ஷ்மன், ரெட் ஜயண்ட் செண்பக மூர்த்தி, இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ், எடிட்டர் ரூபன், கலை இயக்குநர் கதிர், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், வசனகர்த்தா பொன் பார்த்திபன், சிறப்பு ஒப்பனையாளர் பட்டணம் ரஷீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.