எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
2022ம் ஆண்டு தீபாவளி போட்டிக்கு இரண்டே இரண்டு படங்கள்தான் வந்தன. கார்த்தி நடித்த 'சர்தார்', சிவகார்த்திகேயன் நடித்த 'ப்ரின்ஸ்' ஆகியவை தவிர வேறு தமிழ்ப் படங்கள் வெளியாகவில்லை. 'சர்தார்' படம் ஸ்பை த்ரில்லர் படமாகவும், 'ப்ரின்ஸ்' படம் காதல், காமெடி படமாகவும் வந்த படங்கள்.
கார்த்தி நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'பொன்னியின் செல்வன், விருமன்' ஆகியவை வியாபார ரீதியாக வெற்றி பெற்ற படங்கள். அது போல சிவகார்த்திகேயன் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'டான், டாக்டர்' ஆகியவையும் வியாபார ரீதியாக வெற்றி பெற்ற படங்கள். இருவருக்குமே குடும்பத்துடன் வந்து பார்க்கும் ரசிகர்கள் உண்டு. எனவே, இரண்டு படங்களுமே நல்ல வசூலைப் பெறும் என்று எதிர்பார்த்தார்கள்.
இருந்தாலும் 'சர்தார்' படத்தின் வசூல் 'ப்ரின்ஸ்' படத்தின் வசூலை விட இரு மடங்கு இருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'ப்ரின்ஸ்' படத்திற்கான விமர்சனங்கள் சரியாக இல்லாமல் போனது அதன் வசூலை பாதித்திருக்கிறது என்கிறார்கள். மேலும், படம் பார்த்துவிட்டு வெளியில் வந்த ரசிகர்களிடம் யூ டியூப் சேனல்கள் எடுத்து வெளியிட்ட கமெண்ட்டுகளும் மோசமாக இருந்ததால் படத்தைப் பார்க்க அதிகம் பேர் ஆர்வம் காட்டவில்லை என்றும் தகவல். அதே சமயம், 'சர்தார்' படத்திற்கான பாசிட்டிவ் விமர்சனம் தீபாவளி விடுமுறைக்கு ரசிகர்களை தியேட்டர்கள் பக்கம் வரவழைத்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் தியேட்டர்காரர்கள்.
தியேட்டர்கள் வசூல் குறைவாக இருந்தாலும் 'ப்ரின்ஸ்' படம் வெளியீட்டிற்கு முன்பே லாபத்தைப் பார்த்துவிட்டது என சிவகார்த்திகேயனே பிரஸ் மீட்டில் அறிவித்திருந்தார். படத்தின் சாட்டிலைட் உரிமை, ஓடிடி உரிமை, ஹிந்தி டப்பிங் உரிமை ஆகியவை மூலம் மட்டுமே படம் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தைக் கொடுத்திருக்கும். கடந்த நான்கு நாட்களில் 'ப்ரின்ஸ்' படம் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்றிருந்தால் அதுதான் படத்தின் பெரிய வசூலாக இருந்திருக்கும். இன்றைய முன்பதிவு நிலவரங்களைப் பார்த்தால் அது 'ப்ரின்ஸ்' படத்திற்கு மோசமாகவே உள்ளது. மாறாக 'சர்தார்' படத்திற்கு 50 சதவீதத்திற்கும் மேல் உள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்த ஒரு படம் தீபாவளிக்கு வெளிவருவது இதுவே முதல் முறை. அது அவருக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துவிட்டது. கார்த்தி நடித்து இதற்கு முன்பு தீபாவளிக்கு வெளிவந்த படங்களில் 'அழகுராஜா, காஷ்மோரா' தோல்வியைத் தழுவியது. ஆனாலும், 2019 தீபாவளிக்கு விஜய் நடித்த 'பிகில்' படத்துடன் போட்டி போட்டு வெளியான கார்த்தியின் 'கைதி' பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த 2022 தீபாவளி போட்டியிலும் தன்னுடன் போட்டியிட்ட சிவகார்த்திகேயனை முந்தி தீபாவளிப் பரிசை அள்ளிச் செல்கிறார் கார்த்தி.
'சர்தார்' படக்குழுவினர் படம் வெற்றி என்று நேற்று சக்சஸ் மீட் வைத்து அறிவித்துள்ளனர். 'ப்ரின்ஸ்' குழுவினர் வசூல் பற்றி இன்னும் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.