ஜாய் கிரிசில்டா உடன் திருமணம், குழந்தை : ஒப்புக் கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ் | 2025... 10 மாதங்கள், 222 படங்கள் : வெற்றிப் படங்கள் 12 மட்டுமே… | சாமியாரான பாலிவுட் நடிகை | இணை நாயகனான யோகி பாபு | தமிழில் வெளியாகும் 'சத்தா பச்சா' | கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு: 9 விருதுகளை அள்ளிய 'மஞ்சும்மல் பாய்ஸ்' | தெலுங்கில் படம் தயாரிக்கும் சமந்தா : தமிழை புறக்கணிப்பது ஏன் | பிளாஷ்பேக்: பெயரை மாற்றிக் கொண்டு தமிழுக்கு வந்த கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: திரைப்படமான சாண்டில்யன் கதை | மீண்டும் அதே வன்முறை, ரத்தம் : லோகோஷ் கனகராஜ், அருண்மாதேஸ்வரன் மாறவே மாட்டார்களா? |

பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கேரக்டரில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. சாய் பல்லவி நடித்த கார்கி படத்தை தயாரித்தார். தற்போது குமாரி என்ற படத்தை தயாரித்து வருகிறார். மேலும் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் நடித்த அம்மு என்கிற தெலுங்கு படம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி உள்ளது. இதில் நவீன் சந்திரா, பாபி சிம்ஹா நடித்துள்ளனர். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ஞ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்துக்கு தடைகேட்டு தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த மயூரா சினி ஆர்ட்ஸ் என்ற நிறுவனம் “அம்மு என்கிற தலைப்பு எங்களுடையது 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி தயாரிப்பாளர் சங்கத்தில் பெயரை பதிவு செய்தோம். அம்மு படத்தின் கதையும் இயக்குனர் மணிவர்மாவால் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்டது. கொரோனா கால பிரச்சினைகளால் படத்தின் பணிகளை தொடங்கவில்லை.
இந்த நிலையில் அம்மு என்கிற தலைப்பில் படம் எடுத்து அதனை ஓடிடி தளத்தில் வெளியிட்டிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். எனவே அந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என்று சென்னை மாநகர 7வது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த  வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ஞ் நிறுவனம் மற்றும், அமேசான் நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
“அம்மு தெலுங்கு படம், தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தலைப்பு தெலுங்கு படத்தை கட்டுப்படுத்தாது” என்று கார்த்திக் சுப்புராஜ் தரப்பில் கூறப்படுகிறது.