ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

சின்னத்திரை உலகில் இந்த நடிகர்கள் எல்லோரும் சேர்ந்து நடிப்பதால் காதலிக்கிறார்களா? இல்லை காதலிப்பதற்காக சேர்ந்து நடிக்கிறார்களா? என்று கேட்கும் அளவுக்கு வரிசையாக தொலைக்காட்சி பிரபலங்கள் காதல் கதைகளையும், கல்யாண செய்திகளையும் சொல்லி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது புதிதாக இணைந்துள்ள காதல் ஜோடி தான் விஷ்ணுகாந்த் - சம்யுக்தா.
விஷ்ணுகாந்த் ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவியில் சில தொடர்களில் சப்போர்ட்டிங் ரோல்களில் நடித்து வந்தார். அதேபோல் 'நிறைமாத நிலவே' என்கிற வெப் தொடரில் நடித்திருந்த சம்யுக்தாவும் விஜய் டிவியின் 'பாவம் கணேசன்' தொடரின் மூலம் சின்னத்திரையில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், விஷ்ணுகாந்துடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள சம்யுக்தா, அந்த பதிவில், 'கடினமான சூழலுக்கு மத்தியில் நான் உன்னை சந்தித்தேன். என் சிரிப்பிற்கு நீ தான் காரணம். நான் உன்னுடன் இருக்கும் போது என்னையே சிறப்பாக உணர்கிறேன். என்னுடைய வாழ்வில் வந்ததற்கு நன்றி. இந்த பிறந்தநாள் முதல் என்னுடைய அழகான வாழ்க்கை பயணம் உன்னுடன் பயணிக்க இருக்கிறது' என்று எழுதியுள்ளார்.
இந்த புதிய காதல் ஜோடிக்கு சக நடிகர்களும் தொலைக்காட்சி ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.