இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' | அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் |

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த கார்த்தி உள்ளிட்ட பலருக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டிருந்தார் ரஜினிகாந்த். இந்த நிலையில் அப்படத்தில் பெரிய பளுவேட்டரையர் வேடத்தில் நடித்த சரத்குமார், ரஜினியை நேரில் சந்தித்துள்ளார். அது குறித்த வீடியோவை தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார். மேலும், ரஜினியை சந்தித்த இன்றைய நாள் மிக சிறப்பாக தொடங்கியது. அவரிடத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பெரிய பளு வேட்டரையர் வேடம் குறித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அதன்பிறகு காபி அருந்திக்கொண்டு எங்களது தொழில் பற்றி நட்பு ரீதியாக பேசிக் கொண்டோம். அப்போது எங்களுடன் எனது மகள் வரலட்சுமியும் உடன் இருந்தார். அவர் நடித்து வரும் படங்கள் குறித்தும் ரஜினிகாந்த் ஆர்வத்துடன் கேட்டறிந்தார். இப்படி எங்களுக்காக சில மணி நேரங்களை ஒதுக்கிய ரஜினிக்கு என்னுடைய நன்றி என்று தெரிவித்திருக்கிறார் சரத்குமார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.