பிரபாஸ் பிறந்தநாளில் 3 அப்டேட்கள் தந்த தயாரிப்பாளர்கள் | பிரதீப் ரங்கநாதனும்... பின்னே மலையாள ஹீரோயின்களின் ராசியும்… | ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி |

சுதா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் ‛சூரரைப்போற்று'. அபர்ணா பாலமுரளி நாயகியாக நடித்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்தார். இந்த படம் 5 தேசிய விருதுகளை வென்றது. டில்லியில் நேற்று நடந்த தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார் சூர்யா. இதேப்போல் நாயகி அபர்ணா பாலமுரளி, இயக்குனர் சுதா, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகியோரும் விருதுகளை பெற்றனர். சிறந்த படத்திற்காக இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான 2டி நிறுவனத்தின் ஜோதிகாவும் விருது வென்றார்.

பாரம்பரிய உடையில் இவர்கள் அனைவரும் விழாவிற்கு வந்து விருதுகளை பெற்றனர். சூர்யாவிற்கு முதல் தேசிய விருது என்பதால் சூர்யாவின் அப்பா சிவகுமார், அம்மா லக்ஷமி ஆகியோரும், சூர்யாவின் குழந்தைகளும் பங்கேற்றனர். பெற்றோர்கள் வாங்கிய விருதை ஏந்திய படி தியா, தேவ் இருவரும் உற்சாகமாக போஸ் கொடுத்த போட்டோக்கள் வைரலாகின. அதோடு சூர்யா விருது பெற்றபோது ஜோதிகாவும், ஜோதிகா விருது பெற்றபோது சூர்யாவும் போனில் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.

தேசிய விருது பெற்ற கையோடு தனது குடும்பத்தினர் உடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ள சூர்யா, ‛‛சுதாவிற்கு என்றென்றும் நன்றி. விருது பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த விருது எனது அன்பான ரசிகர்களுக்காக...'' என பதிவிட்டுள்ளார்.




