மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? |
பிஎஸ்வி கருடவேகா, சந்தமாமா உள்ளிட்ட பல தெலுங்கு ஆக்ஷன் படங்களை இயக்கிய பிரவீன் சத்தாரு இயக்கத்தில், ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் நார்த்ஸ்டார் எண்டர்டெய்மெண்ட் பேனர்ஸ் இணைந்து, தயாரித்திருக்கும் திரைப்படம் தி கோஸ்ட்.
இதில் நாகார்ஜுனா நாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக டிக்டேடர், ரூலர் படங்களில் நடித்த சோனல் சவுகான் நடிக்கிறார். குல் பனாக் மற்றும் அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முகேஷ் ஜி ஒளிப்பதிவு செய்ய, மார்க் கே ராபின் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் தஸரா வெளியீடாக, அக்டோபர் முதல் வாரத்தில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
தெலுங்கில் 'கோஸ்ட் - கில்லிங் மெஷீன்' என்கிற பெயரில் வெளியாகிறது. தமிழில் 'இரட்சன்- தி கோஸ்ட்' என்ற பெயரில் வெளியாகிறது. நாகார்ஜுனா தமிழில் நடித்த முதல் படமான இரட்சகன் பெயரை படத்துடன் இணைத்திருக்கிறார்கள்