'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ் சினிமாவில் தற்போது அதிக படங்களில் நடித்து வரும் நடிகர் யார் என்றால் அது சரத்குமார் தான். கதாநாயகனாக, முக்கிய வேடத்தில் மற்றும் சிறப்பு தோற்றத்தில் என தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மோஸ்ட் வான்டட் நடிகராக வலம் வரும் சரத்குமார். நாளை மறுநாள் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தநிலையில் தற்போது மலையாளத்தில் மம்முட்டி கதாநாயகனாக நடித்துவரும் கிறிஸ்டோபர் என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார் சரத்குமார்.
மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன் என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார். இதற்கு முன்னதாக கடந்த 2009ல் மலையாளத்தில் வெளியான வரலாற்றுப்படமான 'பழசிராஜா' படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்திருந்தார் சரத்குமார்.. பழசிராஜா கேரக்டரில் நடித்திருந்த மம்முட்டியுடன் அவரது சேனாதிபதியாக நடித்திருந்த சரத்குமாருக்கும் நிறைய பாராட்டுக்கள் கிடைத்தன. அதேபோல கடந்த 2014ல் ஆஷா பிளாக் என்கிற படத்தில் நடித்த சரத்குமார் 8 வருடத்திற்கு பிறகு மீண்டும் மலையாளத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.