'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே(36) உடல்நலக் குறைவால் திடீரென மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோனே. தெலுங்கில் பிரபாஸ் உடன் புராஜெக்ட் கே, ஹிந்தியில் ஷாரூக்கான் உடன் ஜவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு தீபிகாவிற்கு உடல்சோர்வு ஏற்பட்டு மயக்க அடைவது போன்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அவசரமாக அவர் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு பல்வேறு விதமான சோதனைகள் மேற்கெள்ளப்பட்டன. தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் அவருக்கு உடலில் என்ன பிரச்னை என்ற விபரம் வெளியாக வில்லை.
சில வாரங்களுக்கு முன் பிரபாஸின் புராஜெக்ட் கே படத்தில் நடித்தபோதும் தீபிகா உடல்நலம் பாதிக்கப்பட்டார். அப்போது அவரது இதய துடிப்பு வழக்கத்தை விட அதிகமாக இருந்ததாக கூறப்பட்டது. அதற்கான சிகிச்சை மேற்கொண்ட பின் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றார். இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
தீபிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேதியறிந்து ஏராளமான ரசிகர்கள் அவருக்கு என்னாச்சு என சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.