குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
இன்றைய தமிழ் சினிமா உலகில் கடும் போட்டியில் இருப்பவர்கள் இருவர் மட்டுமே. ஒருவர் விஜய், மற்றொருவர் அஜித். கடந்த சில வருடங்களாகவே இவர்கள் இருவருக்கும் போட்டி இருக்கிறதோ இல்லையோ அவர்களுடைய ரசிகர்களுக்கு இடையே கடும் போட்டி இருந்து வருகிறது.
சமூக வலைதளங்களில் எல்லை மீறி சண்டை போட்டுக் கொள்பவர்கள் இருவரது ரசிகர்கள். அவையெல்லாம் சாதாரண சண்டை அல்ல, பல சமயங்களில் அசிங்க அசிங்கமான சண்டைகளும் அரங்கேறும். இருவரது படங்களும் நேருக்கு நேராக மோதிக் கொள்வது எப்போதாவதுதான் நடக்கும். இருவர் படங்களும் மோதல் இல்லாமல் வந்தாலே மோதிக் கொள்பவர்கள் ஒரே நாளில் இருவரது படங்களும் வந்தால் சும்மா இருப்பார்களா?.
அப்படி ஒரு சூழல் தற்போது ஆரம்பமாகி உள்ளது. விஜய் நடித்து வரும் 'வாரிசு' படமும், அஜித் நடித்து வரும் 'துணிவு' படமும் 2023 பொங்கலுக்கு மோதிக் கொள்ளும் வாய்ப்புகள் இருக்கின்றன. இரண்டு படங்களின் படப்பிடிப்பு தற்போது கடைசிக் கட்டத்தை அடைந்துள்ளது.
'வாரிசு' படத்தை 2023 பொங்கலுக்கு வெளியிடுவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார்கள். 'துணிவு' படத்தின் வெளியீடு பற்றி இன்னும் அறிவிக்கவில்லை. விரைவில் அறிவிப்புகள் வரலாம். ஆனாலும், அதற்குள்ளாகவே இருவரது ரசிகர்களும் சமூக வலைதளங்களில் சண்டை போட்டுக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.