உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் |

சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றிப்படமாக அமைந்ததால், அப்படத்தின் இயக்குனர் கவுதம் மேனனுக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேசன் பைக் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். கவுதம் மேனனுக்கு அவர் கொடுத்துள்ள புல்லட் பைக்கின் விலை ரூ.2 லட்சத்துக்கு மேல் இருக்கும் என கூறப்படுது.
சமீபத்தில் வெளியான கமலின் விக்ரம் திரைப்படம் வெற்றிபெற்றபோது அதன் இயக்குனருக்கு ரூ.80 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை பரிசாக வழங்கி இருந்தார் கமல். அதுமட்டுமின்றி அப்படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்களுக்கு பைக்குகளையும் பரிசளித்தார். தற்போது அதே டிரெண்டை தயாரிப்பாளர் ஐசரி கணேசன் பாலோ பண்ணி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.