ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' | நடிக்க வைப்பதை விட நடிப்பது கடினம் : பாலாஜி சக்திவேல் |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'செம்பருத்தி' மற்றும் 'பூவே பூச்சூடவா' தொடர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தன. அந்த தொடர்களில் நடித்த ஷபானாவுக்கும், ரேஷ்மாவுக்கும் ரசிகர்களின் ஆதரவும் பெருகியுள்ளது. ரேஷ்மா தற்போது கலர்ஸ் தமிழின் 'அபி டெய்லர்' தொடரில் நடித்து வருகிறார். 'செம்பருத்தி' தொடர் முடிந்துவிட்ட நிலையில் அடுத்ததாக ஷபானா எந்த பிராஜெக்டில் கமிட்டாக போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.
இந்நிலையில், ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இவர்கள் இருவருமே வெள்ளித்திரையில் புதிய படமொன்றில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. 'பகையே காத்திரு' என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் சின்னத்திரை நடிகைகளான ரேஷ்மாவும், ஷபானாவும் சேர்ந்து நடிக்க உள்ளனர். ஒரே தொலைக்காட்சியில் நடிகைகளாக என்ட்ரி கொடுத்த தோழிகள் இருவரும் தற்போது ஒரே படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் என்ட்ரி கொடுக்க இருப்பதால் ரேஷ்மாவுக்கும், ஷபானாவுக்கும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.
'பகையே காத்திரு' படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கிறார். வரலட்சுமி, ஸ்மிருதி வெங்கட் நாயகிகளாக நடிக்கின்றனர். மணிவேல் இயக்க, சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.