அனுஷ்காவின் ‛காட்டி' படம் மீண்டும் தள்ளிப் போகிறதா? | சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னையா...? : இவானா அளித்த பதில் | திருவண்ணாமலையில் கண்ணீருடன் தரிசனம் செய்த அம்பிகா | சூர்யா சேதுபதி : தமிழ் சினிமாவில் அடுத்த வாரிசு நடிகர், வரவேற்பு பெறுவாரா ? | அல்லு அர்ஜுன் - பிரசாந்த் நீல் கூட்டணியில் 'ராவணம்' | ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? |
கிட்டத்த நூறு படங்களை நெருங்கும் தயாரிப்பு நிறுவனமான ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தற்போது மலையாளத்தில் பஹத் பாசில் படத்தை தயாரிப்பதாக ஒரு அறிவிப்பு வெளியிட்டது மலையாளத்தில் தயாராகும் இந்தப்படத்தின் டைட்டில் ஹனுமன் கியர் என்றும் மற்ற மொழிகளில் இந்த படம் டாப் கியர் என்கிற பெயரில் வெளியாகும் என்றும் இரண்டு போஸ்டர்களையும் வெளியிட்டது.
அதேசமயம் ஏற்கனவே தெலுங்கில் டாப் கியர் என்கிற பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது. சூப்பர்குட் பிலிம்ஸின் அறிவிப்பால் அதிர்ச்சியான அந்த படத்தின் தயாரிப்பாளர், தாங்கள் ஏற்கனவே டாப் கியர் என்கிற பெயரில் ஒரு படத்தை எடுத்து, அந்தப்படம் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளதாகவும் தற்போது இப்படி ஒரு அறிவிப்பு வெளியானதால் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறியதாக மீடியாவில் ஒரு செய்தி வெளியானது.
இந்த நிலையில் தாங்கள் அறிவித்த டைட்டிலை மாற்றிக் கொள்வதாக கூறி இந்த பிரச்சனைக்கு சுமுகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளாராம் ஆர்பி.சவுத்ரி. சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ஆர்பி.சவுத்ரியை நேரில் அணுகி இந்த விஷயத்தை சுட்டிக்காட்டியதும், உடனே எங்களுக்கு இதுபற்றி தெரியாமல் போய்விட்டது என்றும் இதில் ஒன்றும் பிரச்சினை இல்லை நாங்கள் தெலுங்கில் எங்களது படத்தின் டைட்டிலை மாற்றிக் கொள்கிறோம் என்று பெருந்தன்மையுடன் கூறினாராம் ஆர்பி சவுத்ரி. மேலும் அந்த தயாரிப்பு நிறுவனம் இது சம்பந்தமாக அறிக்கை என எதையும் வெளியீட்டு இதை ஒரு பெரிய பிரச்சனை ஆகாமல், நேரடியாக எங்களை தொடர்பு கொண்டது மகிழ்ச்சி என்றும் அதற்காகவே அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளாராம் ஆர்பி சவுத்ரி.