புதிய ஆரம்பம் - நடிகர் கிருஷ்ணா இரண்டாவது திருமணம் | பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் ; ஜோஜூ ஜார்ஜ் | மகளுக்கு டைட்டில் கார்டில் இடம் கொடுத்த மணிரத்னம் ; நன்றி சொன்ன குஷ்பு | 'கல்கி 2' படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகல்? | இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப் | மீண்டும் தள்ளிப் போகும் 'ஹரிஹர வீர மல்லு' | சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? | நீதிமன்றத் தீர்ப்பை ஏற்பாரா? மேல் முறையீடு செய்வாரா விஷால்? | நடிப்பா? தயாரிப்பா?: யோசனையில் ரம்பா | மம்பட்டியான் பாடல் காப்பிரைட் : நடிகர் தியாகராஜன் பெருந்தன்மை |
மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் மற்றும் அரவிந்த்சாமி இருவரும் இணைந்து நடித்துள்ள படம் ஓட்டு. டொவினோ தாமஸ் நடித்த தீவண்டி என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் டி.பி.பெலினி என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிப் படமாக ஒரே நேரத்தில் உருவாகி வந்தது. தமிழில் இந்தபடத்திற்கு ரெண்டகம் என டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. நடிகர் அரவிந்த்சாமி கிட்டத்தட்ட 25 வருட இடைவெளிக்கு பிறகு மலையாளத்தில் நடிக்கும் படமாகவும் மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் முதன் முறையாக தமிழில் அறிமுகமாகும் படமாகவும் இது உருவாகி வந்தது.
இந்த நிலையில் இந்த படம் மலையாளத்தில் மட்டும் வெளியாகி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு இந்த பட தயாரிப்பு நிறுவனம் இதன் தமிழ் படத்திற்கான வேலைகள் சற்று தாமதமாகவும் ஆனாலும் இந்த படத்தை மலையாளம் மற்றும் தமிழில் ஒரே நாளில் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் கூறியிருந்தது. ஆனால் மலையாளத்தில் ஓணம் பண்டிகைக்கு இந்த படத்தை வெளியிட ஏற்கனவே திட்டமிட்டு இருந்ததால் இப்போது இந்த படத்தின் மலையாள பதிப்பை மட்டும் வெளியிட்டுள்ளார்கள். தமிழ் பதிப்பு தயாரான பின்பு இன்னொரு நாளில் தமிழில் மட்டும் ரெண்டகம் படம் தனியாக வெளியாகும் என தெரிகிறது.