இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா | உடும்புபிடியில் அஜித் : இழந்தது பல கோடி | ஹைப்பர் லிங் ஜார்னரில் உருவாகும் 'தி ஒன்' |

பி.எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் மற்றும் புளூஹில்ஸ் புரொடக்ஷன் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள படம் கட்சிக்காரன். இதில் தோனி கபடிகுழு, வேட்டைநாய் படங்களில் நடித்த விஜித் சரவணன் கதையின் நாயகனாகவும், ஸ்வேதா டாரதி நாயகியாகவும் நடிக்க, 'காதல் முன்னேற்ற கழகம்' படத்தில் வில்லனாக நடித்த சிவசேனாதிபதி அரசியல் தலைவராக நடித்திருக்கிறார். அப்புக்குட்டி மற்றும் அசுரவதம் படத்தின் இயக்குநர் மருதுபாண்டியன் ஆகிய இருவரும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளனர். மதன்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரோஷன் இசை அமைத்துள்ளார்.
'தோனி கபடிகுழு' படத்தை இயக்கிய ப.ஐயப்பன் தனது இரண்டாவது படமாக இதை இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது: ஓர் அரசியல் கட்சித் தலைவனுக்கும் தொண்டனுக்கும் உள்ள தொடர்பு பற்றியும் உறவைப் பற்றியும் புது விதத்தில் கூறுகிற படமாக 'கட்சிக்காரன்' உருவாகி உள்ளது. அரசியல் கட்சித் தலைவருக்கும் தொண்டனுக்கும் இடையில் நடக்கும் போராட்டம் தான் கதை. ஒரு தலைவன் எப்படி நேர்மையாக இருக்க வேண்டும் ஒரு தொண்டன் எப்படி விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி இப்படம் அலசுகிறது. முழுக்க முழுக்க அரசியலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி உள்ளது.