Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இசை வெளியீட்டு விழா : ஹெலிகாப்டரில் வந்திறங்கும் சிம்பு - கவுதம் மேனன்

02 செப், 2022 - 12:47 IST
எழுத்தின் அளவு:
Vendhu-thanindhathu-kaadu-Audio-launch-:-Simbu---Gautham-menon-landing-in-Helicopter

கவுதம் மேனன் - சிம்பு கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி உள்ள படம் ‛வெந்து தணிந்தது காடு'. சித்தி இட்னானி நாயகியாக நடித்துள்ளார். ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். செப்., 15ல் படம் திரைக்கு வர உள்ள நிலையில் இன்று(செப்., 2) படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாய் நடைபெறுகிறது. இந்த படத்தை தயாரிக்கும் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்த விழா நடக்கிறது. இதற்காக கடந்த 10 நாட்களுக்கு மேலாக பிரமாண்ட அரங்குகள் உள்ளிட்டவைகள் அமைக்கும் பணி நடந்து வந்தது.

இதனிடையே லேட்டஸ்ட்டாக இந்த விழாவிற்கு நாயகன் சிம்பு, இயக்குனர் கவுதம் மேனன் ஆகியோர் ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறார்களாம். இதற்காக கடந்த சில நாட்களாக ஒத்திகையும் நடந்துள்ளது. மாநாடு படத்தின் வெற்றிக்கு பின் சிம்பு நடிப்பில் அடுத்து வெளியாகும் படம் என்பதாலும், கவுதம் - சிம்பு படம் என்பதாலும் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. அதனால் இசை வெளியீட்டு விழாவையும் இப்படி பிரம்மாண்டமாய் நடத்துகின்றனர். இந்த நிகழ்ச்சி டிவி ஒன்றில் ஒளிபரப்பாக உள்ளது. வெந்து தணிந்தது காடு படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பிரபாஸின் 'புராஜக்ட் கே' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் தென்னிந்திய ஸ்டார்ஸ் ?பிரபாஸின் 'புராஜக்ட் கே' படத்தில் ... 2009 முதல் 14ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு 2009 முதல் 14ம் ஆண்டுக்கான தமிழ்நாடு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Aanandh - thamizhnaadu,யூ.எஸ்.ஏ
03 செப், 2022 - 02:16 Report Abuse
Aanandh எலிக்கப்பட்டாரோ பெருச்சாளிகாப்டரோ சிம்புவை கைத்தாங்கலா கூட்டிட்டுப் போங்கப்பா ரொம்ப தளர்ந்து போச்சு. படம் பப்படம் ஆகாம இருந்தா சரி.
Rate this:
KayD -  ( Posted via: Dinamalar Android App )
02 செப், 2022 - 13:32 Report Abuse
KayD Over built up உடம்புக்கு ஆகாது சிம்பு..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in