'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
ஆத்தா உன் கோவிலிலே, தமிழ் பொண்ணு, மிட்டா மிராசு படங்களில் கதாநாயகனாக நடித்தவர் ரவி ராகுல். தற்போது ரவாளி என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆகி இருக்கிறார். ஆர்.சித்தார்த் கதாநாயகனாக நடிக்க, பாம்பே தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் நைரசா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜெயபிரகாஷ், ரியாஸ் கான், பப்லு, கஞ்சா கருப்பு, அப்புக்குட்டி, சுஜாதா, ஆத்மா ஆகியோர் நடித்துள்ளனர். வினோத் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெய் ஆனந்த், ஏ.எஸ்.மைக்கேல் யாகப்பன் இருவரும் இணைந்து இசையமைத்து உள்ளனர்.
படம் பற்றி ரவி ராகுல் கூறியதாவது: இயக்குனர் ஆகும் கனவில் சினிமாவுக்கு வந்தேன். ஆனால் நடிகர் ஆகிவிட்டேன். என் இயக்குனர் கனவை நனவாக்கும் வாய்ப்பு இப்போது வந்திருக்கிறது. அதனை சிறப்பாக செய்திருப்பதாக நம்புகிறேன். ஏழை பையனை பணக்கார பெண் காதலிக்கிறாள். வீட்டில் எதிர்ப்பு வர, அவனை வெளிமாநிலம் அழைத்துச் சென்று, கோவிலில் திருமணம் செய்கிறாள். தாலி கட்டிய கையோடு வேலை தேடி வெளியே சென்ற காதலன் காணாமல் போகிறான். அவனை நாயகி தேடுவது தான் மீதி கதை. குற்றாலத்தில் தொடங்கி, ஐதராபாத், கோல்கட்டா ஆகிய ஊர்களில் படப்பிடிப்பு நடத்தி, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்கிறார் இயக்குனர் ரவி ராகுல்.