லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் நல்ல விமர்சனங்கள் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து அவரது நானே வருவேன், வாத்தி ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இப்படங்களை தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளார். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார் .
படத்தில் தனுஷுக்கு வில்லனாக பிரபல நடிகர் விநாயகன் நடிக்க இருக்கிறார் . மேலும் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த படம் 1930 இல் நடக்கும் கேங்ஸ்டர் கதை எனவும் கூறப்படுகிறது . இந்த படம் தனுஷிற்கு பான் இந்திய திரைப்படம் எனவும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது . இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பர் முதல் வாரத்தில் துவங்க உள்ளது .