2வது படத்திலேயே ரஜினியை இயக்கும் வாய்ப்பை பெற்ற சிபி சக்கரவர்த்தி | ரத்தக்கண்ணீருக்கு புதிய அங்கீகாரம் | ஓடிடி டிரெண்டிங்கில் 'பகவந்த் கேசரி' | பொங்கல் போட்டி : டிரைலர்களில் முந்தும் 'ஜனநாயகன்' | எனக்கு யாரும் முழு சம்பளம் தந்ததில்லை: ரச்சிதா மகாலட்சுமி பேச்சு | 'திரெளபதி 2' பாடலில் சின்மயி குரல் நீக்கம்: இயக்குனர் பேட்டி | டிரைலரிலும் போட்டி போடும் 'பராசக்தி' | பிளாஷ்பேக்: தமிழ் படத்தில் நடித்த பிரேம் நசீர் மகன் | பிளாஷ்பேக்: நெகட்டிவ் ஹீரோவாக நடித்த சிவாஜி | ‛லொள்ளுசபா' வெங்கட்ராஜ் காலமானார்: நாளை வேளச்சேரியில் இறுதிசடங்கு |

தற்போது எச்.வினோத் இயக்கி வரும் தனது 61வது படத்தில் நடித்து வருகிறார் அஜித்குமார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடிக்கிறார். இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் தனது 62வது படத்தில் வருகிற டிசம்பர் மாதம் முதல் நடிக்கிறார் அஜித். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக விஸ்வாசம் படத்திற்கு பிறகு மீண்டும் நயன்தாரா நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அது குறித்து அவரிடத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்பு அஜித்துடன் 2000ம் ஆண்டில் வெளியான கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய், 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையப்போகிறார். என்றாலும் இப்படத்தில் அஜித் ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிப்பதை படக்குழு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.




