நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன் - அஜித் நன்றி | நடிகர் அஜித், நடிகை ஷோபனாவிற்கு பத்ம பூஷன் விருது | இயக்குனரைக் கவர்ந்த ராஷ்மிகாவின் கண்கள் | ஓராண்டிற்கு பின் இந்து தமிழ் முறைப்படி இரண்டாவது முறை திருமணம் செய்த லப்பர் பந்து நாயகி | வீடு வாடகை பிரச்னை ; கலைமாமணி பட்டத்தை காணவில்லை : கதறும் கஞ்சா கருப்பு | பெண் தயாரிப்பாளர் புகார் : உன்னி கிருஷ்ணன் மீது வழக்கு | அருண் விஜய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகப்பெரிய ஹீரோவின் கோரிக்கையை நிராகரித்த மகிழ்திருமேனி | மகள் பவதாரிணி மறைந்து ஓராண்டு : இளையராஜா உருக்கம் | ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிப்பது உறுதி | 'ரெட்ட தல' டப்பிங்கை முடித்த அருண் விஜய் |
தமிழில் 'சிங்கம்புலி' படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை ஹனிரோஸ். தமிழ், மலையாளம் என மாறிமாறி நடித்து வந்த இவருக்கு இடையில் சிறிய தேக்கம் ஏற்பட்டாலும் தற்போது மீண்டும் பிசியான நடிகையாக மாறியுள்ளார் ஹனிரோஸ். சமீபத்தில் கூட தமிழில் சுந்தர்.சிக்கு ஜோடியாக இவர் நடித்த பட்டாம்பூச்சி என்கிற படம் வெளியானது. இதைத்தொடர்ந்து மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ள மான்ஸ்டர் என்ற படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது தெலுங்கில் கோபிசந்த் மாலினேணி இயக்கத்தில் நடிகர் பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார் ஹனிரோஸ். ஏற்கனவே கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார் ஹனிரோஸ். இதற்கு முன் தான் நடித்த படங்களிலிருந்து இந்த கதாபாத்திரம் ரொம்பவே வித்தியாசமாக இருக்கும் என உறுதியாக கூறும் ஹனிரோஸ் இந்த படத்தில் நடிப்பதற்காக தெலுங்கு கற்றுக்கொண்டு படப்பிடிப்பு சமயத்தில் சரளமாக தெலுங்கு பேசும் அளவிற்கு முன்னேறி விட்டதாக கூறுகிறார்.
மேலும் பாலகிருஷ்ணாவுக்கு ஆந்திராவிலுள்ள ரசிகர்கள் செல்வாக்கை பார்த்து பிரமித்து போனதாக கூறும் ஹனிரோஸ், நீண்ட தூரப் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றபோது கூட கிட்டத்தட்ட ஆயிரம் ரசிகர்கள் தங்களை பின்தொடர்ந்தது வந்ததாக ஆச்சர்யத்துடன் கூறியுள்ளார். மேலும் பாலகிருஷ்ணா, தன்னிடம் மலையாள படம் குறித்து பேசும்போது தனக்கும் மலையாள பட ரீமேக் ஒன்றில் நடிக்க நீண்டநாளாக ஆசை என்றும் ஆனால் தனது ரசிகர்கள் மாஸான கதையிலேயே தன்னை பார்க்க விரும்புவதால் அந்த ஆசை தற்போது வரை கனவாகவே இருக்கிறது என்று கூறி வருத்தப்பட்ட தகவலையும் ஒரு பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார் ஹனிரோஸ்..