Advertisement

சிறப்புச்செய்திகள்

தலைமுறைகள் கடந்து மக்கள் மனதில் வாழும் தமிழகத்தின் ‛சார்லி சாப்ளின்' நாகேஷ் | ஆறாவது தமிழ்ப் படத்தில் ஐஸ்வர்யா ராய் : காத்திருக்கும் ரசிகர்கள் | அயோத்தியில் 'ஆதி புருஷ்' டீசர் வெளியீடு | திருப்பதியில் 'இந்தியன் 2' படப்பிடிப்பு : ஏழுமலையானை தரிசித்த காஜல் | பிக்பாஸ் நிகழ்ச்சி என்ட்ரி குறித்து அப்டேட் வெளியிட்ட 'பாவம் கணேசன்' சீரியல் நடிகை! | நந்தினியாக மாறிய அக்ஷயா கிம்மி | தொகுப்பாளினி மீது வார்த்தை தாக்குதல் நடத்திய நடிகர் கைது | விறுவிறு படப்பிடிப்பில் ஜெயிலர் | முழங்கால் வலிக்கு டாக்டரிடம் சிகிச்சை பெற்ற ராஷ்மிகா | எனக்கு கிடைத்த விருதை எனக்கே அர்ப்பணிக்கிறேன் : ரேவதி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறிப்பு வழக்கு : ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு

17 ஆக, 2022 - 16:03 IST
எழுத்தின் அளவு:
Jacqueline-fernandez-named-as-accused

டில்லியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மனைவியை மிரட்டி ரூ. 215 கோடி பணம் பறித்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் என்பவரை அமலாக்க பிரிவு அதிகாரிகள் கடந்த ஆண்டில் கைது செய்தனர். அவரிடத்தில் நடத்திய விசாரணையில் தொழிலதிபரின் மனைவியை மிரட்டி பறித்த பணத்தைக் கொண்டு தான் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாகவும், பாலிவுட் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

குறிப்பாக, இலங்கையை சேர்ந்த பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டசுடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்திருக்கிறார் சுகேஷ். அப்போது அவருக்கு கோடிக்கணக்கில் பரிசுகளையும் அவர் வழங்கியிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. அதன்பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது சுகேஷிடம் தான் பெற்ற பரிசுகள் குறித்த தகவல்களை தெரிவித்தார். அதையடுத்து ஜாக்குலினுக்கு சொந்தமான 7.27 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் கடந்த ஏப்ரல் மாதம் முடக்கப்பட்டது.

இந்தநிலையில் அந்த வழக்கு தொடர்பான குற்ற பத்திரிக்கையை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று தாக்கல் செய்துள்ளார்கள். அதில், சுகேஷ் மட்டுமின்றி தொழில் அதிபரின் மனைவியை மிரட்டி பணம் பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸும் குற்றவாளியாக முடிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கர்ப்பமானதையும் கவர்ச்சியாக அறிவித்த பிபாஷா பாசுகர்ப்பமானதையும் கவர்ச்சியாக ... ஹிந்தியில் அறிமுகமாகிறார் அனுபமா பரமேஸ்வரன் ஹிந்தியில் அறிமுகமாகிறார் அனுபமா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Mohan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22 ஆக, 2022 - 07:14 Report Abuse
Mohan CORRECT MOVE BY GOVENMENT ... NICE SLAP TO THE ACTRESS... WHOEVER GIVES MONEY THEY ARE GOING RIGHT...LET THEM FACE THESE TYPES OF ACTIONS ALSO ... JAIHIND
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Ponniyin Selvan
  Tamil New Film Varisu
  • வாரிசு
  • நடிகர் : விஜய்
  • நடிகை : ராஷ்மிகா மந்தனா
  • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
  Tamil New Film Coffee with Kadhal
  • காபி வித் காதல்
  • நடிகர் : ஜீவா ,ஐஸ்வர்யா ராய்,
  • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Sardar
  • சர்தார்
  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
  dinamalar advertisement tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in