விடுதலை-3 படம் உருவாகிறதா? சூரி சொன்ன பதில் | விஜய் பட விவகாரம்! - வருத்தம் தெரிவித்த ராஷ்மிகா மந்தனா | சமரச மையத்தில் ஜெயம் ரவி - ஆர்த்தி! நீதிபதி போட்ட உத்தரவு | மார்க்கெட்டை‛ஸ்டெடி' செய்யும் நடிகை | ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'மெண்டல் மனதில்' படப்பிடிப்பு துவக்கம் | கதையின் நாயகனாக தொடர விரும்பும் சூரி! | சூர்யா அளித்த உறுதியால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | நடிகர் அல்லு அர்ஜுன் மீது தெலுங்கானா முதல்வர் குற்றச்சாட்டு | எனக்கு வயசே ஆகாது: சரத்குமார் | விதி எப்போதும் மாறாது: ஜெயம் ரவி |
சிம்புவுடன் இணைந்து ‛பத்து தல' என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார் கவுதம் கார்த்திக். இந்த நிலையில் தற்போது கவுதம் கார்த்திக் நடித்து முடித்துள்ள ‛ஆகஸ்ட் 16 1947' என்ற படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் அவர் நடித்துள்ள இந்த படத்தை என்.எஸ்.பொன்குமார் என்பவர் இயக்கி இருக்கிறார். இந்தியா சுதந்திரம் அடைந்த அடுத்த நாள் நிகழ்ந்த ஒரு உண்மைச் சம்பவக் கதையை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் போஸ்டர் கடந்த மே மாதத்தில் வெளியான நிலையில், 75வது சுதந்திர தின விழாவான நேற்று இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த டீசரை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார். அதோடு, சுதந்திர போராட்டம், ஒடுக்கு முறைக்கு எதிரான சக்தி, சுதந்திரத் தின சிறப்பு என பதிவிட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது .