''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
சின்னத்திரை மற்றும் சினிமா நடிகையான ஜெயலட்சுமி தனது பெயரை பயன்படுத்தி பண வசூல் செய்து வருவதாக சினிமா பாடலாசிரியரான சினேகன் புகார் கூறியுள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
நான் 'சினேகம் பவுண்டேசன்' என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளையை நடத்தி வருகிறேன். எனது அறக்கட்டளை மூலம் தமிழகம் முழுவதும் பல சேவை திட்டங்களை சட்டத்திற்கு உட்பட்டு செய்து வருகிறேன். சமீபகாலமாக எனது அறக்கட்டளை பெயரை நடிகை ஜெயலட்சுமி தவறாக பயன்படுத்தியும், தான் தான் 'சினேகன் அறக்கட்டளை' நிறுவனர் என்று கூறியும் நிதி வசூலித்ததாக பல புகார்கள் வந்தது.
நான் பொதுமக்களிடம் பொது வெளித்தளங்கள் மூலம் இதுவரை எந்த நிதியும் திரட்டவில்லை. ஜெயலட்சுமி எனது அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி நிதி வசூலித்ததாக வருமான வரித்துறை எனது கவனத்துக்கு கொண்டு வந்தது.
எனது அறக்கட்டளையை இயக்குவதாக இணையதளத்தில் விளம்பரம் செய்து தொலைபேசி மூலம் பொதுமக்களிடம் பறிக்கும் ஜெயலட்சுமி மீது மோசடி வழக்கு பதிவு செய்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும். மேலும், அந்த போலியான இணைய தளத்தை முடக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.