கவினுக்கு ஜோடியாகும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி | மீண்டும் இணையும் இருமுகன் கூட்டணி | மீசைய முறுக்கு 2 டீசருக்கு வரவேற்பு | அதிகரிக்கும் ரீ ரிலீஸ் படங்கள் : நல்லதா.... கட்டுப்பாடு வரணுமா...? | வரலட்சுமி இயக்கும் தெலுங்குப் படம் : 'சரஸ்வதி' டிரைலர் ரிலீஸ் | பெங்களூரு ஏஎம்பி சினிமாஸ் தியேட்டரில் மகேஷ்பாபு | சென்னையும், தமிழும்…. பிரபாஸ் நெகிழ்ச்சி… | 'டாக்சிக்' டீசர் : கன்னடத்தை விட தெலுங்கு, ஹிந்தி 'டாப் வியூஸ்' | 4 இடியட்ஸ் : ஒரே வீட்டுக்குள் நடக்கும் கதை | யார் ஹீரோ... திணறும் நெல்சன்... 47 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ரஜினி, கமல் பட அறிவிப்பு வீடியோ வெளியீடு |

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, இர்பான் பாதான், மியா ஜார்ஜ். கே. எஸ். ரவிக்குமார் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கோப்ரா. ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது. இப்படியான நிலையில் தற்போது இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இன்று முதல் கோப்ரா படத்தின் ரீ ரெக்கார்டிங் பணியை தொடங்குவதாக ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதனால் இசைப் பணிகள் முடிவடைந்ததும் கோப்ரா படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிப்பார்கள் என்று தெரியவந்துள்ளது. இதை வைத்துப் பார்க்கும்போது, ஏ. ஆர். ரஹ்மான் பின்னணி இசை பணிகளை முடித்துக் கொடுக்க காலதாமதம் ஆனதால் தான் கோப்ரா படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துள்ளார்கள் என்பது தெரியவந்திருக்கிறது.




