‛விடுதலை'-க்காக இளையராஜா இசையில் பாடிய தனுஷ் | ‛மைக்கேல்' விமர்சனம் : அனைவரையும் திருப்திபடுத்தும் படைப்பு இல்லை - ரஞ்சித் ஜெயக்கொடி | 'ஏகே 62' இந்த வாரம் அறிவிப்பு வருமா ? | இன்ஸ்டாவில் சண்டை : கடுப்பாகி எச்சரித்த சீரியல் நடிகை | ஷிவின் வெற்றி பெற்றிருந்தால்...? மனம் திறக்கும் கதிர் | படிக்கதான் முடியல அட்வைஸாச்சும் பண்ணுவோம்! டிடி வெளியிட்ட ஆக்ஸ்போர்ட் அட்வைஸ் | வாரிசு - 300 கோடி கடந்ததாக விஜய் ரசிகர்கள் செய்யும் 'டிரெண்டிங்' | 800 கோடி வசூலைக் கடந்த 'பதான்' | கீதா கோவிந்தம் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் தேரகொண்டா | மீண்டும் நடிக்கிறார் தங்கர் பச்சான் |
துள்ளுவதோ இளமை படம் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் தனுஷ் இன்று கோலிவுட், டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என உயர பறந்து கொண்டிருக்கிறார். நேற்றைய தினம் இவரது பிறந்தநாள். அவர் நடித்துள்ள வாத்தி படத்தின் டீசர் வெளியானது. தொடர்ந்து அவர் நடித்து வரும் சில படங்களின் போஸ்டர்கள் வெளியாகி அந்த படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்தனர். ரசிகர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலரும் அவரை வாழ்த்தினர். இந்நிலையில் தன்னை வாழ்த்தியவர்களுக்கு நன்றி கூறியுள்ளார் தனுஷ்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை : ‛‛இது எங்கிருந்து துவங்கியது என்று எனக்கு தெரியவில்லை. எனது பிறந்தநாளுக்கு வாழ்த்திய நலம் விரும்பிகள், திரையுலகினர், நண்பர்களுக்கு நன்றி. குறிப்பாக ரசிகர்களின் வாழ்த்து, அளவற்ற அன்பு, ஆதரவுக்கு நன்றி. கடந்த 20 ஆண்டுகளாக ரசிகர்களே எனது தூண்களாக இருந்து என்னை ஆதரிக்கின்றனர். உங்களின் அன்பால் நெகிழ்கிறேன். விரைவில் படங்கள் மூலம் சந்திக்கிறேன். ஓம் நமசிவாய'' என தெரிவித்துள்ளார் தனுஷ்.