'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

தெலுங்கு தயாரிப்பாளர்கள் தயாரிக்க, தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ், சம்யுக்தா மேனன், சாய் குமார், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்க தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் படம் 'வாத்தி'.
இப்படத்தின் டீசர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியிடப்பட்டது. யு டியூபில் வெளியான இரண்டு மொழி டீசர்களில் தமிழ் டீசரை விட தெலுங்கு டீசருக்குக் கூடுதலான வரவேற்பு கிடைத்துள்ளது. இருந்தாலும் தனுஷ் படத்திற்கான வழக்கமான வரவேற்பு இது இல்லை. தமிழ் டீசர் 14 லட்சம் பார்வைகளையும், தெலுங்கு டீசர் 18 லட்சம் பார்வைகைளை மட்டுமே இதுவரை பெற்றுள்ளது.
தமிழ், தெலுங்கு இரு மொழிப் படம் என்று சொன்னாலும் காட்சிகள் தெலுங்குப் படங்களைப் போலத்தான் உள்ளது. போலீஸ் நிலைய சுவற்றில் உள்ள போர்டில் தெலுங்கு எழுத்துக்கள், வண்டி எண்களில் ஆந்திரா பதிவு எண்கள், ஆந்திரா பேருந்துகள் என தெலுங்கு வாடை வீசுகிறது.
சமீபத்தில் வெளிவந்து படுதோல்வி அடைந்த 'வாரியர்' படத்திலும் இப்படித்தான் ஏமாற்றி இருந்தார்கள். அது போலவே 'வாத்தி' படத்திலும் செய்துள்ளார்கள் போலிருக்கிறது. பேசாமல் ஒரு மொழியில் எடுத்துவிட்டு அடுத்த மொழியில் டப்பிங் படம் என அறிவிக்கலாமே ?. எதற்கு ரசிகர்களை இப்படி ஏமாற்ற வேண்டும் ?.




