
ஜெயிலர் படத்தில் முக்கிய வேடத்தில் வசந்த் ரவி
இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் வசந்த் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. ராம் இயக்கிய தரமணி படத்தில் அறிமுகமான வசந்த் ரவி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான ராக்கி என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படமும் வசந்த் ரவியின் கதாபாத்திரமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. இதைத்தொடர்ந்தே ஜெயிலர் படத்தில் அவர் இடம்பெற்றுள்ளார் என்று சொல்லப்படுகிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!