சிரஞ்சீவியின் பெயர், குரல், புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை போட்ட நீதிமன்றம்! | தகுதிக்கு உரிய சம்பளம் கேட்க தயங்குவதில்லை! - சொல்லுகிறார் பிரியாமணி | பிளாஷ்பேக்: தபால்காரர் தேர்வு செய்த தரமான பாடலுடன் வெளிவந்த “தங்கை” திரைப்படம் | 'பைசன்' படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு | ஆதங்கத்துடன் புலம்பும் முகமூடி நடிகை | நடிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் நடிகை | மலையூரு நாட்டாமை மனச காட்டு பூட்டாம..: ‛டூரிஸ்ட் பேமிலி' கமலேஷ் | அனுபமாவின் அனுபவம் | 59 நாட்களில் தமிழ் கற்றேன்: ‛செம்பருத்தி பூ' ஸ்வாதி | நான் ஏன் பிறந்தேன், முத்து, மார்கன் - ஞாயிறு திரைப்படங்கள் |

சில வருடங்களுக்கு முன்புவரை போலீஸ் கதாபாத்திரமா, கூப்பிடு பிரித்திவிராஜை என்று சொல்லும் அளவிற்கு அதிரடியான படங்களில் நடித்து வந்தார் பிரித்விராஜ். அதன்பிறகு கதைக்கும் வித்தியாசமான கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களில் நடிக்க தொடங்கினார். அதே சமயம் அவற்றிலும் கமர்சியல் அம்சம் இருக்குமாறு தவறாமல் பார்த்துக்கொண்டார். அப்படி அவர் நடித்த டிரைவிங் லைசென்ஸ், ஐயப்பனும் கோஷியும், ஜனகனமன ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன.
அதேசமயம் ஆடுஜீவிதம் படத்தில் பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் இளைஞனாக உடல் இளைத்து ஆளே மாறிப்போய் அந்த படத்திற்காக ரொம்பவே மெனக்கெட்டு தன்னை வருத்திக் கொண்டார் பிரித்விராஜ். இந்த நிலையில் சமீபத்தில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் வெளியான கடுவா படம் மூலம் மீண்டும் கமர்சியல் பார்முலாவிற்கு அடி எடுத்து வைத்த பிரித்விராஜ், மலையாளத்தில் ஆக்சன் படங்களின் வருகை குறைவாக இருப்பதால் இப்படி ஒரு முயற்சியில் இறங்கியதாக கூறினார்.
இந்த நிலையில் மீண்டும் அதே ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் காப்பா என்கிற படத்தில் நடிக்கிறார் பிரித்விராஜ்.. இதில் கோட்ட மது என்கிற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பிரித்விராஜ். எழுத்தாளர் சங்கத்திற்கு நிதி திரட்டும் விதமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கிய உள்ள நிலையில் வித்தியாசமான ரவுடி லுக்கில் பிரித்விராஜ் காட்சியளிக்கும் இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது..