அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
மலையாள சினிமாவின் முதல் இயக்குனர் ஜே.சி.டேனியல். இவர் பெயரில் செயல்பட்டு வரும் அறக்கட்டளை ஆண்டுதோறும் சிறந்த சினிமா கலைஞர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. அந்த வரிசையில் 13வது ஜே.சி.டேனியல் அறக்கட்டளை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கிரிஷாந்த் ஆர் கே இயக்கிய 'அவச வ்யூஹம்' சிறந்த படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குனருக்கான விருதை 'மதுரம்' படத்திற்காக அகமது கபீர் பெறுகிறார். மதுரம், நயத்து, பிரீடம் பைட் ஆகிய படங்களில் நடித்ததற்காக ஜோஜு ஜார்ஜ் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 'உடல்' படத்தில் நடித்ததற்காக துர்கா கிருஷ்ணா சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
உன்னி முகுந்தன் 'மேப்படியான்' படத்தில் நடித்ததற்காக சிறப்பு நடுவர் குழுவின் விருதை பெறுகிறார். ஹோலி பாதர் படத்தை இயக்கிய விஷ்ணு மோகன் அறிமுக இயக்குனருக்கான விருதை பெறுகிறார்.