'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
‛ஜெய்பீம்' படம் தொடர்பான வழக்கு விசாரணையில் சூர்யா உள்ளிட்டோர் மீது எந்த கடும் நடவடிக்கையும் எடுக்க கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி வரவேற்பையும், அதேசமயம் சர்ச்சையையும் கிளப்பிய படம் ‛ஜெய்பீம்'. இந்த படத்தில் வன்னியர்களை புண்படுத்தும் விதமாக காட்சியமைப்புகள், குறியீடுகள் இடம் பெற்றதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து சூர்யா, ஞானவேல் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சூர்யா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.
இதை எதிர்த்து வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் சூர்யா, ஞானவேல் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் முறையிட்டனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது புகார்தாரர் தரப்பில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என கூறப்பட்டது. இதை ஏற்று, வழக்கை ஜூலை 21க்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை இந்த வழக்கில் கடும் நடவடிக்கை எதுவும் எடுக்க கூடாது என உத்தரவிட்டார்.