பொங்கல் போட்டியில் 2 படங்கள் மட்டுமா? | தாஷமக்கான் தலைப்புக்கு என்ன அர்த்தம் | பிளாஷ்பேக்: வரதட்சணை கொடுமைக்கு எதிரான முதல் படம் | ‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற வேடத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்ற சூர்யா, தற்போது பாலா இயக்கும் வணங்கான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து வெற்றிமாறன், ஆர்.ரவிக்குமார் ஆகியோர் இயக்கும் படங்களில் நடிக்க உள்ள சூர்யா, அதையடுத்து விக்ரம் குமார் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக புதிய தகவல் ஒன்றும் வெளியாகி உள்ளது. 2016ம் ஆண்டு விக்ரம் குமார் இயக்கிய 24 என்ற படத்தில் நடித்திருந்தார் சூர்யா. அந்த படத்தில் மூன்று வேடங்களில் ஹீரோ- வில்லன் என இரண்டு விதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 24 என்ற படத்தின் இரண்டாம் பாகத்தில் சூர்யாவும், விக்ரம் குமாரும் இணைய திட்டமிட்டு இருப்பதாகவும், இந்த படத்திலும் முதல் பாகத்தை போலவே ஹீரோ - வில்லன் என இரண்டு விதமான வேடங்களில் சூர்யா அடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.




