ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
பிரபல நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன்(70) வயதுமூப்பு காரணமாக காலமானார். சென்னை, கீழ்ப்பாக்கத்தில் வசித்து வந்த பிரதாப் போத்தன் தூக்கத்திலேயே இறந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பிரதாப் போத்தன் என்றால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சற்றென்று நினைவுக்கு வருவது ‛மூடு பனி' படத்தில் இரவு வேளையில் கிட்டாரை வைத்துக் கொண்டு அவர் பாடும் என் இனிய பொன் நிலாவே பாடல் தான். இந்த படத்தில் சைக்கோ தனமான வேடத்தில் அவர் நடித்து அனைவரையும் கவர்ந்தார். ‛‛அழியாத கோலங்கள், மூடுபனி, ஆயிரத்தில் ஒருவன், அலெக்ஸ் பாண்டியன், பூஜை'' உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் ‛‛மீண்டும் ஒரு காதல் கதை, ஜீவா, வெற்றிவிழா, சீவலப்பேரி பாண்டி'' உள்ளிட்ட 12 படங்களை இயக்கி உள்ளார். ஓரிரு படங்களை தயாரித்தும் உள்ளார். ஹீரோ, வில்லன், காமெடி என நடிப்பில் பன்முக பரிமாணத்தை காட்டியவர் பிரதாப் போத்தன்.
1985ம் ஆண்டு சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருது 'மீண்டும் ஒரு காதல் கதை" திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது. கேரள மாநில அரசின் விருது, பிலிம்பேர், சைமா போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார் பிரதாப்.
பிரதாப் போத்தன் மறைவுக்கு திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை அல்லது நாளை காலை அவரது இறுதிச்சடங்கு நடக்கும் என தெரிகிறது.