தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது |
இயக்குனர் மணிபாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பேட்டரி' படத்தில் அம்மு அபிராமி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகனாக செங்குட்டுவன் நடித்துள்ளார். இவர்களுடன் தீபக் செட்டி, எம்.எஸ்.பாஸ்கர், யோக் ஜபீ ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தை ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரித்துள்ளது. பேட்டரி படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இயக்குனர் வெற்றிமாறன் பேசுகையில், ‛இப்படம் ஆரம்பித்ததில் இருந்து மணிபாரதியை தெரியும். இப்படத்தை முடித்து விட்டு படம் பார்க்க சொன்னார். அந்த நேரத்தில் பார்க்க முடியவில்லை. அவர் கேட்டபோதே இப்படத்தை பார்த்திருந்தால் அவர் கூறியதுபோல இப்படம் வெளியாவதற்கு உதவி புரிந்திருப்பேன். ஆனால், இப்போது பிவிஆர் இதனை வெளியிடுகிறார்கள். நான் வெளியிடுவதைவிட இப்படம் இப்போது பெரிய வெளியீடாக தான் இருக்கும். அது இப்படத்திற்கு நல்லது என்று தான் நினைக்கிறேன். இசையமைப்பாளருக்கு வாழ்த்துகள். டிரைலரைப் பார்க்கும் போது ஈடுபாட்டுடனும், பிடிப்புடனும் இருக்கிறது. ஒரு நல்ல படத்தில் இருந்து தான் இதுபோன்ற டிரைலர் வரும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது. இப்படத்தைப் பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக உள்ளேன். இயக்குனர் மணிபாரதிக்கு சிறப்பான வாழ்த்துகள். இப்படம் வெற்றியடைய வாழ்த்துகள்' என்றார்.