பிளாஷ்பேக்: வட்டார மொழி பேசி, வாகை சூடிய முதல் தமிழ் திரைப்படம் “மக்களைப் பெற்ற மகராசி” | சூர்யா 46 வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்த அப்டேட் | ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய சிம்பு | மண்டாடி படத்தில் படகு ரேஸ் வீரராக நடிக்கும் சூரி | 'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு |

பாகுபலி, பாகுபலி 2 , ஆர்ஆர்ஆர் போன்ற பிரமாண்ட படங்களை இயக்கி ஹாலிவுட் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார் ராஜமவுலி. அவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ஆர்ஆர்ஆர் என்ற படம் 1100 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்தது. அடுத்தபடியாக மகேஷ் பாபு நடிக்கும் தனது புதிய படத்தை இயக்கப் போகிறார். ஆப்பிரிக்க காடுகளை மையமாகக் கொண்ட கதையில் இப்படம் உருவாகிறது.
இந்த நிலையில் தற்போது ராஜமௌலி அளித்துள்ள ஒரு பேட்டியில், தனது கனவு படமான மகாபாரதத்தை இயக்குவது எப்போது? என்பது குறித்து ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில், ஆர்ஆர்ஆர் படத்தையடுத்து மகேஷ்பாபு நடிப்பில் ஒரு மெகா படத்தை இயக்கப்போறேன். இந்த படத்துக்கு பிறகு நான்கு படங்களை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளேன். அந்த படங்களை முடித்த பிறகு தான் எனது கனவு படமான மகாபாரதத்தை இயக்குவேன். அந்த படத்தை இயக்குவதற்கு நீண்ட கால அவகாசம் தேவைப்படுவதால் அந்த படம் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்த முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்று கூறியிருக்கிறார் ராஜமவுலி.
இந்த மகாபாரத படத்தை ராஜமௌலி கிடப்பில் போட்டு விட்டதாக டோலிவுட்டில் செய்திகள் வெளியாகி வந்த நிலையில் அது குறித்து தற்போது அவர் இப்படியொரு விளக்கத்தை அளித்துள்ளார்.




