விஜய் 68 : முதல் பாடலுக்கு நடனம் அமைக்கும் பிரபுதேவா | அஜர்பைஜான் கிளம்பிய அஜித் - த்ரிஷா : ஒரு வழியாக துவங்குகிறது ‛விடாமுயற்சி' | 32 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ரஜினி - அமிதாப் கூட்டணி : வந்தாச்சு அறிவிப்பு | ரஜினி படத்தில் இணைந்தார் பஹத் பாசில் | ரிபெல் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | எனக்கு யார் அறிவுரையும் தேவையில்லை : எதிர்நீச்சல் நந்தினி | இளமை ததும்பும் ஸ்ருதி ராஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | ஜாலியாக ஊர்சுற்றும் சின்னத்திரை த்ரீ ரோஸஸ் | ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் | மீண்டும் வந்தார் ‛புன்னகை பூ' கீதா |
மித்ரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையில், கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா மற்றும் பலர் நடிக்கும் படம் 'சர்தார்'. வரும் தீபாவளியன்று வெளியாக உள்ள இப்படத்தைத் தெலுங்கில் நடிகர் நாகார்ஜுனா குடும்ப நிறுவனமான அன்னபூர்னா ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது.
இது பற்றிய அறிவிப்பை நேற்று அறிவித்தார்கள். ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் இப்படத்தை வெளியிடுவது மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார்கள்.
அதற்கு நன்றி தெரிவித்து கார்த்தி, “நான் நாகார்ஜுனா காரு உடன் இருக்கும் போது என்னைப் பற்றி சிறப்பாக உணர வைப்பார். இப்போது எனது படத்தை அவர் வெளியிடுவது எனக்கு இன்னும் வலிமையாக உணர வைக்கிறது,” என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு நாகார்ஜுனா, “அன்புள்ள கார்த்தி, எனது சகோதரா, உன்னுடன் செலவிட்ட அந்த நேரங்கள் இனிமையானவை, இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறேன். தம்புடு, நீங்கள் இன்னும் சாதிப்பீர்கள், கடவுள் ஆசீர்வதிக்கட்டும்,” என பதிலளித்துள்ளார்.
தற்போது விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தை இயக்கி வரும் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், கார்த்தி, நாகார்ஜுனா இருவரும் 'தோழா' படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.