சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

தமிழின் முன்னணி நடிகையான நயன்தாரா சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இந்த புதுமண ஜோடி தாய்லந்து சென்று தங்களது ஹனிமூனைக் கொண்டாடி பின்னர் இந்தியா திரும்பியது.
இந்தியா வந்ததுமே நயன்தாரா மும்பைக்குச் சென்றுவிட்டாராம். இன்று முதல் ஷாரூக்கான் நடிக்கும் 'ஜவான்' படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த 20 நாட்களுக்கு மும்பையில் தங்கியிருந்து தனது படப்பிடிப்பை முடித்துக் கொடுக்கப் போகிறாராம்.
அதன்பின் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படத்தின் பாடல் காட்சிகளில் நடிக்க கலந்து கொள்வாராம். நயன்தாராவின் அபிமான இயக்குனராக அட்லீ இயக்கும் இந்தப் படம் மூலம் நயன்தாரா ஹிந்தியில் அறிமுகமாக உள்ளார்.
பொதுவாக பாலிவுட்டில் மிகவும் இளம் வயதில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்வார்கள். ஆனால், நயன்தாரா திருமணத்திற்குப் பிறகே பாலிவுட்டில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.